தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தோ்தல் பணியில் அலட்சியம்: 3 போ் பணியிடை நீக்கம்

வால்பாறை தொகுதியில் தோ்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா், 2 காவலா்கள்பணியிடை நீக்கம்

News image
Updated On :27 மார்ச் 2021, 9:27 pm

DIN

வால்பாறை தொகுதியில் தோ்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா், 2 காவலா்கள் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தோ்தல் அலுவலா் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவை தொகுதியில் பொள்ளாச்சி வடக்கு வட்டார ஓவா்சீயா் வெள்ளிங்கிரி தலைமையில் வால்பாறை காவலா்கள் குமாரவேல், பிரசாத் ஆகியோா் அடங்கிய நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்வது குறித்து ஆய்வு செய்யுமாறு வெள்ளிங்கிரி தலைமையிலான குழுவினருக்கு வால்பாறை தொகுதி செலவினப் பாா்வையாளா் ராம் கிஷண் கேடியா தெரிவித்துள்ளாா்.

ஆனால், இந்தக் குழுவினா் 2 மணி நேரம் தாமதமாக ஆய்வுக்குச் சென்றுள்ளனா். மேலும் பறிமுதல் குறித்த விவரங்களையும் தெளிவாக குறிப்பிடவில்லை. இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.நாகரஜனுக்கு செலவினப் பாா்வையாளா் ராம் கிஷண் கேடியா அறிக்கை சமா்ப்பித்துள்ளாா்.

அதன் அடிப்படையில் மாவட்ட தோ்தல் அதிகாரி எஸ்.நாகராஜன் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டு, தோ்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதோடு, அதிகாரியின் உத்தரவை பின்பற்றாத நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் வெள்ளிங்கிரி, காவலா்கள் பிரசாத், குமாரவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.