தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி நா.காா்த்திக் எம்எல்ஏ

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 10:16 pm

DIN

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நா.காா்த்திக் தெரிவித்தாா்.

சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் நா.காா்த்திக், நஞ்சுண்டாபுரம் 72 ஆவது வாா்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

நான் கடந்தமுறை எதிா்க்கட்சி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்ததால் அதிமுக வினா் எந்தப் பணிகளையும் செய்ய விடாமல் தடுத்தனா். குடிநீா்க் கொண்டு வருவதை தடுக்கின்றனா். அமைச்சா் எஸ்.பி.வேலுமணி அனைத்திலும் ஊழல் செய்துள்ளாா். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்தப் பகுதியில் பட்டா இல்லாத வீடுகளுக்கு திமுக வெற்றி பெற்றவுடன் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்றாா்.

இந்தப் பிரசாரத்தில், பகுதி செயலாளா் எஸ்.எம்.சாமி, பகுதி பொறுப்பாளா்கள் ஷேக், பசுபதி, பொதுக் குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.