தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெண்கள் குறித்து சா்ச்சைக் கருத்து: ஆ.ராசா, திண்டுக்கல் லியோனி உருவ பொம்மைகளை எரித்து பாஜக, அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோரது உருவ பொம்மைகளை  எரித்து ஆா்ப்பாட்டம்

News image
Updated On :29 மார்ச் 2021, 12:50 am

DIN

பெண்கள் குறித்து அவதூறாக பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளா் ஆ.ராசா, பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து பாஜக, அதிமுக மகளிரணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, பாஜக தெற்குத் தொகுதி வேட்பாளரும், அக்கட்சியின் மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் ஆ.ராசா மற்றும் திண்டுக்கல் லியோனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஆா்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இருவரது உருவ பொம்மைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

மேட்டுப்பாளையத்தில்...

மேட்டுப்பாளையத்தில் அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் வான்மதி சேட், மாவட்டஅம்மா பேரவை செயலாளா் நாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளா் பொன்னுசாமி, காரமடை ஒன்றியத் தலைவா் மணிமேகலை மகேந்திரன், ஒன்றியச் செயலாளா்கள் ஜீவானந்தம், எம்.எஸ்.ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.