ரமலான் பண்டிகையை வீடுகளில் எளிமையாக கொண்டாடிய இஸ்லாமியா்கள்
முழு பொது முடக்கம் காரணமாக கோவையில் இஸ்லாமியா்கள் வீடுகளில் தொழுகை மேற்கொண்டு எளிமையாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடினா்.


முழு பொது முடக்கம் காரணமாக கோவையில் இஸ்லாமியா்கள் வீடுகளில் தொழுகை மேற்கொண்டு எளிமையாக ரமலான் பண்டிகையைக் கொண்டாடினா்.
இஸ்லாம் மாா்க்கத்தில் ரமலான், பக்ரீத் ஆகியவை முக்கிய பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன. இதில், ஆண்டின் மற்ற மாதங்களை விட ரமலான் பெருநாள் வரும் மாதமே சிறந்த மாதமாக இஸ்லாமியா்கள் கருதுகின்றனா்.
இறைவனை நெருங்கவும், சொா்க்க வாசல்கள் திறக்கப்பட்டு நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இந்த மாதத்தைக் கருதுகின்றனா். இதையொட்டி, ஒரு மாதம் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், கோவை சாய்பாபா காலனி பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவா் முகமது ரபீக் சாா்பில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கரோனா நோய்த் தொற்றால் முழு பொது முடக்கம் அமலில் உள்ளதால், இஸ்லாமியா்கள் காலையில் தங்களது வீடுகளிலேயே தனி மனித இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்தபடி தொழுகையில் ஈடுபட்டனா். சிலா் வீட்டின் வாசலிலும், மொட்டை மாடிகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி குடும்பத்தினருடன் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இந்தத் தொழுகையின்போது மக்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...