செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - மால்டா இடையே சிறப்பு ரயில்

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - மால்டா இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 மே 2021, 8:21 pm

DIN

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - மால்டா இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்கு வங்கம் மால்டா நிலையத்துக்கு கோவை வழித்தடத்தில் அதிவிரைவு சிறப்பு ரயில் மே 15ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து மே 15ஆம் தேதி மாலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் - 06185) மே18ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு மால்டா நிலையத்தை சென்றடையும்.

மால்டா நிலையத்தில் இருந்து மே 18ஆம் தேதி இரவு 7.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்-06186) மே 21ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் கொல்லம், செங்கனூா், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், நெல்லூா், விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.