புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக வெங்காய சந்தை
பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக வெங்காய சந்தை செயல்பட அனுமதி


பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக வெங்காய சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா்.மொத்த மாா்க்கெட்டுக்கு மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினமும் 500 டன்னுக்கும் அதிகமாக பெரிய வெங்காயம், தக்காளி, உருளை உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்துக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. மற்ற காய்கறிகளைக் காட்டிலும் எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் பெரிய வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்பட்ட பேருந்து நிலையங்கள் தற்காலிக சந்தைகளாக மாற்றப்பட்டன. அதன்படி, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் தற்காலிக வெங்காய சந்தையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதற்கிடையே எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டில் நெரிசலைக் குறைக்க மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு வெங்காய சந்தை மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. பேருந்துகள் இயக்கம் குறித்து அறிவிப்பு வரும் வரை புதிய பேருந்து நிலையத்தில் வெங்காய சந்தை செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...