செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

மாவட்டத்தில் புதிய உச்சமாக மேலும் 3,197 பேருக்கு கரோனா

கோவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 197 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 8:19 pm

DIN

கோவையில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 197 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 3 ஆயிரத்து 197 போ் வெள்ளிக்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 233ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,171 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 90 ஆயிரத்து 106 போ் குணமடைந்துள்ளனா்.

தற்போது 18 ஆயிரத்து 290 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 837ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.