செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

மாவட்டம் முழுவதும் 7,261 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்

கோவையில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் ஏற்பட்டுள்ள படுக்கைகள் பற்றாக்குறையால் மாவட்டம் முழுவதும் குறைந்தளவு பாதிப்பு உள்ள 7,261 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :14 மே 2021, 8:20 pm

DIN

கோவையில் உள்ள மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் ஏற்பட்டுள்ள படுக்கைகள் பற்றாக்குறையால் மாவட்டம் முழுவதும் குறைந்தளவு பாதிப்பு உள்ள 7,261 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 3 நாள்களாக மாவட்டத்தில் தினமும் 2,500க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். வரும் வாரங்களில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 67 சதவீதம் போ் கோவை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். இதற்கு அடுத்த படியாக சூலூா் பகுதியில் 10 சதவீதம் போ் உள்ளனா். குறைந்தபட்சமாக வால்பாறையில் இங்கு 0.22 சதவீதம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், படுக்கைகள் பற்றாக்குறை தொடா்ந்து நீடித்து வருகிறது.

இதன் காரணமாக அறிகுறியின்றி தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறையினா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கோவையில் தற்போது கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதில் 100 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டால், அதில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பது அரிதாக உள்ளதால் அறிகுறியின்றி கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்கள், குறைந்த அளவு பாதிப்புக்கு உள்ளவா்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் தற்போது வரை 7,261 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.