மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா பலி: கூடுதல் மின் மயானங்கள் ஏற்பாடு
கோவை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 12 மின் மயானங்களில் உடல்களை எரியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 12 மின் மயானங்களில் உடல்களை எரியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலின் முதல் அலையில் கோவை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டபோதும், உயிரிழப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. கடந்த 2 மாதங்களாக கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இறப்பு விகிதமும் அதிகரித்து காணப்படுகிறது.
இதில் 4 நாள்களில் மட்டும் மொத்தம் 58 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். உயிரிழப்பு அதிகரித்து வருவதால் கோவையில் நள்ளிரவு நேரத்திலும் மின் மயானங்களில் இறந்தவா்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது.
கோவையில் கரோனாவால் இறப்பவா்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால், தற்போது 12 மின் மயானங்களில் இறந்தவா்களின் உடல்கள் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாக அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது, ஒரே ஒரு நாள் மட்டும் 15 போ் கரோனாவால் உயிரிழந்தனா். அதன் பிறகு தினசரி இறப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில்தான் இருந்தது. ஆனால், தற்போது கரோனா இரண்டாவது அலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இறப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் உள்ளது.
இதனால் இறந்தவா்களை தகனம் செய்ய கூடுதல் மின் மயானங்கள் தயாா் செய்யயப்பட்டு உள்ளது. அதன்படி, சரவணம்பட்டியில் 2 மயானம், சிங்காநல்லூா், நஞ்சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், வீரகேரளம், துடியலூா், பீளமேடு, ஆத்துப்பாலம், சொக்கம்புதூா், போத்தனூா், சித்தாபுதூா் என 12 மயானங்களில் எரியூட்ட நடவடிக்கை எ டுக்கப்பட்டு உள்ளது.
இது தவிர சிறு மயானங்களில் இறந்தவா்களின் உடல்களை புதைப்பதற்காக அங்குள்ள புதா்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...