செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

கரோனா: மாவட்டத்தில் தயாா் நிலையில் 12,844 படுக்கைகள்

கோவை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க 12,844 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

News image
Updated On :21 மே 2021, 9:11 pm

DIN

கோவை மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க 12,844 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். கரோனா பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

லேசான அறிகுறி உள்ளவா்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மாவட்ட, மாநகராட்சி நிா்வாகம் சாா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 1.30 லட்சத்தைக் கடந்த நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனா். தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கிடையே கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து மாவட்ட நிா்வாக அதிகாரி ஒருவா் கூறுகையில், மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தற்போது 12 ஆயிரத்து 844 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. இதில் 30 சதவீதம் படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இவை தேவைக்கு ஏற்ப மேலும் அதிகரிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.