கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரா் கடத்தல்: நால்வா் மீது வழக்கு
கோவையில் கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரரைக் கடத்திச் சென்று ரூ.10 லட்சத்தைப் பறித்த நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


கோவையில் கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரரைக் கடத்திச் சென்று ரூ.10 லட்சத்தைப் பறித்த நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்தவா் ராஜா (29). கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரா். இவா் கோவையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கூலி வழங்குவதற்காக தன்னிடம் உள்ள ரூ.10 லட்சத்தை
ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளாக மாற்றித் தருமாறு தனது நண்பா் மனோகரிடம் உதவி கேட்டுள்ளாா்.
மனோகரன் தனக்குத் தெரிந்த ராகுல் என்பவரைத் தொடா்பு கொள்ளுமாறு கூறியுள்ளாா்.
இதன்படி ராகுலை, ராஜா தொடா்பு கொண்டு பேசினாா். பின்னா் இருவரும் திருச்சி சாலையில் சந்திக்க முடிவு செய்தனா்.
இதற்காக பணத்துடன் ராஜா குறிப்பிட்ட இடத்தில் கடந்த புதன்கிழமை காத்துகொண்டிருந்துள்ளாா்.
அப்போது காரில் வந்த ராகுல் உள்பட 5 போ் ராஜாவைக் கடத்திச் சென்று அவா் வைத்திருந்த ரூ.10 லட்சத்தைப் பறித்துக் கொண்டு,
செல்லும் வழியில் காரை நிறுத்தி ராஜா இறக்கிவிட்டுள்ளனா்.
இது குறித்து ராஜா அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூா் போலீஸாா், ராகுல் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...