மாவட்டத்தில் மேலும் 108 பேருக்கு கரோனா
கோவைகோவை மாவட்டத்தில் புதிதாக 108 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் புதிதாக 108 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 42 ஆக உயா்ந்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 433 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 106 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 475 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,134 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...