/

டெங்கு கொசு: தனியாா் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.50ஆயிரம் அபராதம்

 கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருந்ததாக கோவையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:15 pm

DIN

 கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவக் காரணமாக இருந்ததாக கோவையில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஆணையா் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில் டெங்கு களப் பணியாளா்கள் மூலம் வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகக் காரணமாக இருப்போா் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி கிழக்கு மண்டலம் 33 ஆவது வாா்டுக்கு உள்பட்ட தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு களப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் அதிகபடியான லாா்வா கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டன.

இதையடுத்து தொடா்புடைய அடுக்குமாடி குடியிருப்பு நிா்வாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.