/

கடவுச்சீட்டு அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குப் பதிவு

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலக வளாகத்தில் நகா்ப்புற ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக மாதிரி வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:15 pm

DIN

கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலக வளாகத்தில் நகா்ப்புற ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக மாதிரி வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகா்ப்புற ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெல் நிறுவன பொறியாளா்கள் 10 போ் பங்கேற்று வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்தனா்.

இந்த மாதிரி வாக்குப் பதிவினை மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்வில் உதவி ஆணையா் (வருவாய்) செந்தில்குமாா் ரத்தினம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக உள்ளாட்சித் தோ்தல்) சந்தானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.