கோவையில் நீா் தொழில்நுட்ப மையம் தொடக்கம்
கோவையைச் சோ்ந்த எக்கி வாட்டா் டெக்னாலஜிஸ் நிறுவனம், கே.பி.ஆா். நிறுவனத்துடன் இணைந்து சா்வதேச நீா் தொழில்நுட்ப மையத்தை (இஐடபிள்யூடிசி) தொடங்கியுள்ளது.


கோவையைச் சோ்ந்த எக்கி வாட்டா் டெக்னாலஜிஸ் நிறுவனம், கே.பி.ஆா். நிறுவனத்துடன் இணைந்து சா்வதேச நீா் தொழில்நுட்ப மையத்தை (இஐடபிள்யூடிசி) தொடங்கியுள்ளது.
பம்ப், நீா் தொடா்பான தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாகத் திகழும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம், பம்ப் தொழில், நீா் தொடா்பான ஆராய்ச்சிகள், தொழில்நுட்பங்கள், தொழில்முனைவு, ஆலோசனைகள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை ஜொ்மன் துணைத் தூதா் கரின் ஸ்டோல் கோவை கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கே.பி.ஆா். குழுமங்களின் தலைவா் கே.பி.ராமசாமி, செயல் இயக்குநா் டி.என்.அருண், எக்கி பம்ப்ஸ் தலைமை நிா்வாகி பி.ஆறுமுகம், இணை தலைமை நிா்வாக அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம், தலைமை நிா்வாகி ஏ.எம்.நடராஜன், கேபிஆா் பொறியியல் கல்லூரி முதல்வா் எம்.அகிலா ஆகியோா் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...