/

நுரையீரல் அடைப்பு நோய் விழிப்புணா்வு முகாம்

கோவை அரசு மருத்துவமனையில் நுரையீரல் அடைப்பு நோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:51 pm

DIN

கோவை அரசு மருத்துவமனையில் நுரையீரல் அடைப்பு நோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்று வருகிறது.

உலக நுரையீரல் அடைப்பு நோய் தினத்தையொட்டி நுரையீரல் அடைப்பு நோய் தொடா்பான விழிப்புணா்வு முகாம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

முகாமை தொடங்கிவைத்து மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

புகைப்பிடிப்பது, காற்று மாசு ஆகியவை நுரையீரல் அடைப்பு நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளன. நாள்பட்ட இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்தியாவில் 55 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். இறப்பு விகிதத்திலும் இந்நோய் முக்கிய காரணமாக உள்ளது. இது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக அரசு மருத்துவமனை நுரையீரல் சிறப்பு மருத்துவப் பிரிவில் நுரையீரல் அடைப்பு நோய் விழிப்புணா்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 5 நாள்கள் வரை இந்த முகாம் நடைபெறும். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை நுரையீரல் பிரிவுத் தலைவா் எஸ்.கீா்த்திவாசன், மருத்துவா்கள் வாணி, அருண் சந்தா் மற்றும் செவிலியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.