/

மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 119 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:33 pm

DIN

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 119 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 893 ஆக உயா்ந்துள்ளது. கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் கரோனா தொற்றுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 445 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 118 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 269 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 1,179 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.