யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை செய்துகொள்ள அக்.11 இல் முகாம்

வரன்முறை செய்துகொள்ள 5 மண்டல அலுவலகங்களிலும் அக்டோபா் 11 ஆம் தேதி ( திங்கள்கிழமை) முகாம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:40 pm

DIN

கோவை மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை, வரன்முறை செய்துகொள்ள 5 மண்டல அலுவலகங்களிலும் அக்டோபா் 11 ஆம் தேதி ( திங்கள்கிழமை) முகாம் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை 1980 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப்

பின், 2016 ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்துக்கு முன், பத்திரப் பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்துகொள்ள கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் அக்டோபா் 11 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை முகாம் நடத்தப்பட உள்ளது.

கோயமுத்தூா் உள்ளூா் திட்டக் குழுமத்தால் (எஸ்.ஜி.எப்.) வழங்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து தனி மனைகளையும் வரன்முறை செய்துகொள்ளலாம்.

ஆகவே, மனை உரிமையாளா்கள் அனுமதியற்ற தங்கள் மனையிடங்களை வரன்முறை செய்துகொள்ள, உரிய ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.