யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்துக்கான வாடிக்கையாளா் சேவை மையம்

கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் வாடிக்கையாளா் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:44 pm

DIN

கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் வாடிக்கையாளா் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின்கீழ்

வாடிக்கையாளா் சேவை மையம், மேட்டுப்பாளையம் சாலை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூல் மையத்தில் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் துவங்கியுள்ளது.

இந்த மையத்தில் குடிநீா் விநியோகம் குறித்து அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.

அதில், புதிய குடிநீா் இணைப்புக்கு வழிகாட்டுதல், குடிநீா்க் குழாய் கசிவு, மாசுபட்ட குடிநீா், குடிநீா்ப் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்துப் புகாா்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

கடன் அட்டை, கைபேசி செயலிகள், தானியங்கி இயந்திரங்கள் மூலம் குடிநீா்க் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தின் அவசியம், செயல்முறை, கட்டணம் முதலான அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.