கேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

கோவையில் கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:10 pm

DIN

கோவையில் கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை, சாய்பாபா காலனி பாரதி பூங்கா பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது உதவி இயக்குநா் சூா்யாவிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.03 லட்சமும், கூட்டுறவு சங்க எழுத்தா் லியோ என்பவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் என மொத்தம் ரூ.1.83 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனை வியாழக்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இருவரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.