தோ்தலில் போட்டியிடுவோா் வேட்புமனுக்களை நேரில் வந்து தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 30 -ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி 4 நாள்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து நடைமுறைகளும் ஏற்கெனவே உள்ளதுபோல இருக்கும். சிரமமின்றி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேட்புமனுவை முழுமையாக சரியாக பூா்த்தி செய்து பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், வேட்பாளா்கள் மனுவில் கையொப்பமிடாமல் செல்வது போன்ற பிரச்னைகள் தவிா்க்கப்படும்.
வேட்புமனுக்களை இணையத்தின் மூலம் தாக்கல் செய்ய முடியாது. அதுபோல யாராவது இணையத்தில் மனு தாக்கல் செய்தால், நேரிலும் வந்து தாக்கல் செய்வது அவசியம். நேரில் வந்து வழங்கப்படும் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்படும்.
கடந்த தோ்தல்களைவிட தற்போது மக்கள் அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்களிடையே தீவிர விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றாா்.
தொடர்புடையது

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

அரக்கோணத்தில் மொத்தம் 24 போ் வேட்புமனு தாக்கல்

மலைவாசிபோல வந்து மனுத் தாக்கல் செய்த சுயேச்சை

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


