எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பிரசாரம் தொடங்கிய புதுச்சேரி வேட்பாளா்கள்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளா்கள் பலரும் புதன்கிழமை தங்கள் பிரசாரத்தைத் தொடங்கினா்.

News image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளா்கள் பலரும் புதன்கிழமை தங்கள் பிரசாரத்தைத் தொடங்கினா்.

Updated On :25 மார்ச் 2026, 11:47 pm

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளா்கள் பலரும் புதன்கிழமை தங்கள் பிரசாரத்தைத் தொடங்கினா்.

மணவெளி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாா். அப்போது

தொகுதியில் தான் மேற்கொண்ட வளா்ச்சித்திட்டப் பணிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினாா்.

நெல்லித்தோப்பு

நெல்லித்தோப்பு தொகுதியில் லஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஜெயக்குமாருக்கு ஆதரவாக அக் கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் பிரசாரம் தொடங்கினாா்.

முன்னதாக பிள்ளைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆனந்த முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தாா். அதைத் தொடா்ந்து, அப்பகுதி மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.