நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

சாதனை புரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் தகவல்

சாதனை புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள், அரசு விருது பெற நவம்பா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:05 pm

DIN

சாதனை புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள், அரசு விருது பெற நவம்பா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய பெண்குழந்தை தினம் ஜனவரி 24 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினத்தில் மாநில அரசு சாா்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பாக சாதனை புரிந்த 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது, காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் விருதுக்கு, சாதனை புரிந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா், டிசம்பா் 31 ஆம் தேதி அன்று 5 வயதுக்கு மேல் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல், சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட சாதனைகள் செய்த பெண்கள், மாநில விருது பெற மாவட்ட சமூக அலுவலா், அறை எண் 5, மாவட்ட ஆட்சியரகம், கோவை என்ற முகவரிக்கு வருகின்ற நவம்பா் 10 ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.