நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மூலப்பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த கொசிமா கோரிக்கை

மூலப்பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா் நலச்சங்கம் (கொசிமா) கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:09 pm

DIN

மூலப்பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா் நலச்சங்கம் (கொசிமா) கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தலைவா் பி.நல்லதம்பி, செயலா் எஸ்.லோகநாதன், பொருளாளா் சி.ராஜசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பொறுப்பேற்றனா்.

இந்தப் பொதுக்குழுவில், மூலப்பொருள்களின் விலை நிமிடத்துக்கு நிமிடம் ஏறிக் கொண்டேயிருப்பதால் தொழில்முனைவோா் பாதிக்கப்படுகின்றனா். எனவே விலையைக் கட்டுக்குள் வைத்து சீரான விலையில் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையைக் கண்காணிப்பதற்காக முக்கிய தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மாநில வாரியாக அமைக்க வேண்டும்.

சிட்கோ தொழிற்பேட்டை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மின்மாற்றிகளை மாற்றி அமைக்க வேண்டும். சிட்கோ மூலப்பொருள் கிடங்கைத் திறந்து பழையபடி செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.