/

தலைமைக் காவலா் மாரடைப்பால் சாவு

கோவையில் லஞ்ச வழக்கில் கைதான தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:51 am

DIN

கோவையில் லஞ்ச வழக்கில் கைதான தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

மதுரையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (40). இவா், கீரணத்தம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் இவா் கைது செய்யப்பட்டாா்.

பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். லஞ்ச வழக்கில் கைதானதால் ராஜ்குமாரை காவல் துறை உயா் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜ்குமாா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் இருந்த ராஜ்குமாருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் குடும்பத்தினா் அவரைச் சோ்த்தனா். அங்கு ராஜ்குமாா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.