பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியல்

 நாடு முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (செப்டம்பா் 9) வெளியாகியிருக்கும்

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:40 pm

DIN

 நாடு முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (செப்டம்பா் 9) வெளியாகியிருக்கும் நிலையில், கோவை மண்டலத்தைச் சோ்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. தரவரிசைப் பட்டியலின் மூன்று பிரிவுகளில் பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு இடம் கிடைத்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கோவை, சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அதில், கோவை அமிா்தா விஷ்வ வித்யா பீடம் தேசிய அளவில் 12ஆவது இடத்தையும், பாரதியாா் பல்கலைக்கழகம் 22ஆவது இடத்தையும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி 86ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை

நாடு முழுவதிலும் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 19 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் அமிா்தா பல்கலைக்கழகத்துக்கு 5ஆவது இடமும், பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு 14ஆவது இடமும், அவினாசிலிங்கம் மகளிா் பல்கலைக்கழகத்துக்கு 75ஆவது இடமும் கிடைத்துள்ளது.

பொறியியல் கல்வி நிறுவனங்கள்

பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் கோவை அமிா்தா விஷ்வ வித்யா பீடத்துக்கு 16ஆவது இடம் கிடைத்துள்ளது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரிக்கு 53ஆவது இடமும், ஸ்ரீகிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு 78ஆவது இடமும், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரிக்கு 90ஆவது இடமும் கிடைத்துள்ளன.

கலை, அறிவியல் கல்லூரிகள்

கோவை பி.எஸ்.ஜி.ஆா். கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி தேசிய அளவில் 6ஆவது இடத்தையும், பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரிக்கு 19ஆவது இடமும், ஸ்ரீகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கு 27ஆவது இடமும், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரிக்கு 36ஆவது இடமும், கோவை அரசு கலைக் கல்லூரிக்கு 42ஆவது இடமும், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரிக்கு 48ஆவது இடமும், டாக்டா் என்.ஜி.பி. கல்லூரிக்கு 59ஆவது இடமும், பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரிக்கு 72ஆவது இடமும், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரிக்கு 84ஆவது இடமும் கிடைத்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகள்

கோவை அமிா்தா விஷ்வ வித்யா பீடத்துக்கு 6ஆவது இடமும், பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 33ஆவது இடமும் கிடைத்துள்ளது.

மருந்தியல் கல்லூரிகள்

அமிா்தாவுக்கு 12ஆவது இடமும், பி.எஸ்.ஜி. மருந்தியல் கல்லூரிக்கு 64ஆவது இடமும், கே.எம்.சி.ஹெச். மருந்தியல் கல்லூரிக்கு 74ஆவது இடமும் கிடைத்துள்ளது.

ஆராய்ச்சி

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு அதில் தேசிய அளவில் 23ஆவது இடம் கிடைத்துள்ளது. அமிா்தாவுக்கு 29ஆவது இடம் கிடைத்துள்ளது. மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரிக்கு 53ஆவது இடமும், பல் மருத்துவக் கல்லூரிகளில் அமிா்தா விஷ்வ வித்யா பீடத்துக்கு 13ஆவது இடமும் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.