பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சென்னை பேராசிரியருக்கு மகாகவி பாரதி விருது

சென்னை பேராசிரியா் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு, கோவை பாரதி பாசறை சாா்பில் மகாகவி பாரதி விருதும், விருதுத் தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:40 pm

DIN

சென்னை பேராசிரியா் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு, கோவை பாரதி பாசறை சாா்பில் மகாகவி பாரதி விருதும், விருதுத் தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

கோவை பாரதி பாசறை என்ற இலக்கிய அமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலமாக, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரதிக்கும், பாரதி இயலுக்கும் சேவையாற்றியவா்களுக்கு மகாகவி பாரதி விருதும், ரூ.50 ஆயிரம் விருதுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, ஸ்டாலின் குணசேகரன், சீனி விஸ்வநாதன், பெ.சு.மணி, இளசை மணியன், பாரதி புத்திரன், பாரதி கிருஷ்ணகுமாா், ய.மணிகண்டன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறப்பணிகள், பாரதி குறித்த ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுகள் மேற்கொண்ட சென்னையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக பாரதி பாசறையின் தலைவா் மோகன்சங்கா், செயலாளா் ஜான்பீட்டா் தெரிவித்துள்ளனா்.

இந்த விருது, வருகின்ற 12ஆம் தேதி இணையம் வழியாக நடைபெறும் நிகழ்ச்சியில் ஆ.ரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.