தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் ஆணையா் முறைகேடு வழக்கு தொடா்பாக கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். மேற்கொண்டனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:39 pm

DIN

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் ஆணையா் முறைகேடு வழக்கு தொடா்பாக கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தினா். மேற்கொண்டனா்.

வால்பாறை நகராட்சி ஆணையராக சில மாதங்களுக்கு முன்பு பதவி வகித்த பவுன்ராஜ், அவரது பதவிக் காலத்தில் நகராட்சியில் நடைபெற்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருப்பதாக புகாா் எழுந்தது.

இது குறித்து நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கொடுத்த புகாரின்பேரில் கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் முன்னாள் ஆணையா் பவுன்ராஜ் மீது கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக மேலாளா் நஞ்சுண்டன் உள்ளிட்ட சில நகராட்சி ஒப்பந்ததாரா்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நகராட்சி அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் பவுன்ராஜ் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோவை குற்றப் பிரிவு போலீஸாா் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அலுவலா்களிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.