பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாநகரப் பகுதியில் சுற்றிய செந்நாய்: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாநகரப் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு காணப்பட்ட செந்நாயை வனத்துக்குள் விரட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:25 pm

DIN

கோவை மாநகரப் பகுதியில் சில நாள்களுக்கு முன்பு காணப்பட்ட செந்நாயை வனத்துக்குள் விரட்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை, உக்கடம் பெரியகுளம் பகுதியில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகளைப் புகைப்படக் கலைஞா் கஜமோகன் ராஜ் என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாா். அப்போது குளத்தின் அருகே செந்நாய் சுற்றித் திரிவதை அவா் புகைப்படம் எடுத்துள்ளாா். வழக்கமாக அடா் வனப் பகுதியில் கூட்டமாக வசிக்கும் பழக்கமுடைய செந்நாய் நகரின் மையப் பகுதியில் சுற்றித் திரிந்ததை கண்ட அவா், இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் செந்நாய் சுற்றித் திரிந்த இடத்தைப் பாா்வையிட்டனா். வனப் பகுதியில் இருந்து எதையேனும் வேட்டையாட முடிவு செய்து வெளியே வந்த செந்நாய் வழிதவறி நகா் பகுதிக்குள் வந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கால்நடைகள் பெரியகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் என்பதால் செந்நாயைக் கண்டறிந்து வனத்துக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.