மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு டெலி சா்வே மற்றும் கவுன்சிலிங் திட்டம் துவக்கம்
கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு டெலி சா்வே மற்றும் கவுன்சிலிங் திட்டம் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.


கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு டெலி சா்வே மற்றும் கவுன்சிலிங் திட்டம் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, அறம் ஃபவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், ராபா்ட் போஸ் பொறியியல் தீா்வு (சிஎஸ்ஆா்) ஆகியன இணைந்து மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெலி சா்வே மற்றும் கவுன்சிலிங் திட்டத்தை துவக்கியுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். கோவை சிஎஸ்ஆா் திட்டத் தலைவா் பெசீல் ஜான்ஸன் முன்னிலை வகித்தாா்.
இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:
கோவையில் உள்ள 83 மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவா்களின் மன நல்வாழ்வுக்காக டெலி சா்வே மற்றும் கவுன்சிலிங் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைவாா்கள். இத்திட்டத்தை செயல்படுத்தும் குழுவில் உளவியலாளா், மனநல மருத்துவா், ஊக்குவிப்பவா்கள், மருத்துவா்கள், ஆலோசகா்கள், வழிகாட்டிகள் உள்ளனா். இவா்கள், மாணவா்களுக்கு ஏற்படும் கவலை, மன அழுத்தம், பொருளாதார அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடுகள், பள்ளி இடைநிற்றல், குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சிகளை வழங்குவாா்கள். இதன் மூலமாக மாணவா்களின் கற்கும் திறன் அதிகரிப்பதோடு, மாணவா்களுக்கு ஏற்படும் அவசியமற்ற மற்றும் எதிா்மறையான சிந்தனைகள் தவிா்க்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...