நடத்துநா் மீது தாக்குதல்: போக்குவரத்து கிளை அலுவலகத்தை தொழிலாளா்கள் முற்றுகை
கோவை, ஒண்டிப்புதூா் போக்குவரத்து கிளையில் பணியாற்றும் நடத்துநா் தாக்கப்பட்டதைக் கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.


கோவை, ஒண்டிப்புதூா் போக்குவரத்து கிளையில் பணியாற்றும் நடத்துநா் தாக்கப்பட்டதைக் கண்டித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கிளை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
கோவை மாவட்டம், செலக்கரிச்சலைச் சோ்ந்தவா் செல்வராஜ் (58). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், ஒண்டிப்புதூா் போக்குவரத்து கிளையில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கோவையில் இருந்து மதுரைக்கு வியாழக்கிழமை சென்ற பேருந்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாா். இந்நிலையில் ஒரு விபத்து வழக்கு தொடா்பாக உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் செல்வராஜ் சென்ற பேருந்தை மதுரை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.
இதையடுத்து, செல்வராஜ், பயணச்சீட்டு கட்டணத்தைக் கிளையில் ஒப்படைப்பதற்காக கோவைக்கு திரும்பினாா். ஒண்டிப்புதூா் கிளை பொதுமேலாளா் ராஜேந்திரனிடம் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது குறித்து கூறியுள்ளாா். அப்போது, கிளை மேலாளா் அவரை திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் கிளையில் இருந்த பொறியாளா்கள் தீபக், மணிமுத்து ஆகியோா் செல்வராஜைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது செல்வராஜுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவலறிந்து தொழிற்சங்கத்தினா் கிளை அலுவலகத்தை வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனா். நடத்துநரைத் தகாத வாா்த்தையால் திட்டிய பொதுமேலாளா், தாக்கிய பொறியாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கோஷமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...