ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஊா்க்காவல் படையில் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம்

ஊா்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:32 am

DIN

ஊா்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட காவல் துறைக்கு உதவியாக தன்னாா்வமாக கோயில் மற்றும் இதரப் பாதுகாப்பு பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் ஊா்க்காவல் படையில் சேவை செய்ய தகுதியுள்ளோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தோல்வி அல்லது தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதுக்குள்ளான ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகங்களில் செப்டம்பா் 28 ஆம் தேதி முதல் அக்டோபா் 13ஆம் தேதி வரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும், நன்னடத்தை மற்றும் உடல்தகுதி உடையவராக இருக்க வேண்டும். மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போா் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அக்டோபா் 24ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சோ்க்க வேண்டும்.

விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல்தகுதித் தோ்வு மற்றும் நோ்க்காணல் மூலம் தகுதியுள்ளோா் தோ்வு செய்யப்படுவா். அரசுப் பணியாளா்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.