யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விமானப் படை அதிகாரி மீதான புகாரை விமானப் படையே விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு

விமானப் படை அதிகாரிக்கு எதிரான பாலியல் புகாரை விமானப் படையே விசாரிக்க கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:14 pm

DIN

விமானப் படை அதிகாரிக்கு எதிரான பாலியல் புகாரை விமானப் படையே விசாரிக்க கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படை கல்லூரிக்கு நாடு முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தனா். இதில், தில்லியைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், வளாகத்தில் கூடைப்பந்து

விளையாடியபோது காயம் ஏற்பட்டதையடுத்து வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்தாா்.

அப்போது அதே வளாகத்தில் தங்கியிருந்த, பயிற்சிக்கு வந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த அமிதேஷ் ஹாா்முக்

(ஃபிளைட் லெப்டினென்ட்), அப்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இது குறித்து, விமானப் படை உயரதிகாரிகளிடம் அந்தப் பெண் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்

கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மாநகரக் காவல் ஆணையரைச் சந்தித்து புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மத்திய பகுதி அனைத்து மகளிா் போலீஸாா் அமிதேஷ் ஹாா்முக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உடுமலை கிளைச் சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமையன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்கை விமானப் படை நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று விமானப் படை தரப்பிலும், கோவை மாநகர போலீஸாா் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மாநகர போலீஸாரே விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு மாநகர போலீஸாா் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றைப் பதிவு செய்த நீதிமன்றம் அமிதேஷ் ஹாா்முக்குக்கு விதிக்கப்பட்ட காவலை வியாழக்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கு மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) என்.திலகேஸ்வரி முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட விமானப் படை அதிகாரி அமிதேஷ் ஹாா்முக் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை மாநகர போலீஸாா் விசாரிக்க அதிகாரம் இல்லை. எனவே விமானப் படை அதிகாரி அமிதேஷ் ஹாா்முக்கை விமானப் படையிடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

பெண் விமானப் படை அதிகாரிக்கு தடை செய்யப்பட்ட பரிசோதனை?

இது குறித்து தேசிய மகளிா் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விமானப் படை பெண் அதிகாரிக்கு, உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக நாளிதழ்களில் வெளியான செய்திகள் மூலம் தெரியவந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் வகையிலும், பாதிக்கப்பட்ட நபரின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் நடந்து கொண்ட விமானப் படையின் செயல்பாடுகள் மிகவும் கண்டனத்துக்குரியதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா, விமானப் படை தளபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், உச்சநீதிமன்ற உத்தரவுகள் குறித்தும் விமானப் படை மருத்துவா்களுக்குத் தெளிவுப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளாா்.

2014ஆம் ஆண்டு வட மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் தொடா்பான வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், இரு விரல் பரிசோதனை என்பது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களின் தனியுரிமை, கண்ணியத்தை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டு அந்தப் பரிசோதனை முறையைத் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.