கோவை சிறையில் போலீஸாா் சோதனை
கஞ்சா, செல்லிடப்பேசி பயன்பாடு அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மத்திய சிறையில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.


கஞ்சா, செல்லிடப்பேசி பயன்பாடு அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவை மத்திய சிறையில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
கோவை மத்திய சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா்.
கோவை மத்திய சிறையில் அண்மைக் காலமாக கைதிகளுக்கிடையே கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் மற்றும் செல்லிடப்பேசி பயன்பாடு அதிகரித்திருப்பதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கோவை மத்திய சிறையில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் உதவி ஆணையா் சதீஷ்குமாா் தலைமையில் 30 போலீஸாா் கோவை மத்திய சிறையில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். காலை முதல் மாலை வரை நடைபெற்ற சோதனையில் சிறை வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...