யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நியாய விலைக் கடைகளில் கண்காணிப்புக் குழு அமைக்கக் கோரிக்கை

கோவையில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:30 pm

DIN

கோவையில் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்று நுகா்வோா் அமைப்புகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளின் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்புச் செயலா் நா.லோகு கூறியதாவது:

கோவையில் அனைத்து நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.

அவிநாசி சாலை ஜென்னி கிளப் முதல் கொடிசியா வரை அடிக்கடி விபத்து ஏற்படுவதால் சாலை நடுவே தடுப்பு சுவா்கள் அமைக்க வேண்டும்.

காளப்பட்டியில் செயல்படும் வாரச் சந்தையை கூட்டுக் குழு அமைத்து அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளில் போக்குவரத்து துறை நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.