வீட்டிலேயே 5 வாக்குகள்; ஆனால் வாங்கிய மொத்த வாக்கு 1: பாஜக பிரமுகர் அதிர்ச்சி

வீட்டிலேயே 5 வாக்குகள்; ஆனால் வாங்கிய மொத்த வாக்கு 1: பாஜக பிரமுகர் அதிர்ச்சி

கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு அவரது 1 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கோவை: கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு அவரது 1 ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2 ஊராட்சித் தலைவர், 10 ஊராட்சிக வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

இதில் பெ.நா.பாளையம் வட்டாரம், குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டு உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. தனது ஓட்டு மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது வீட்டில் 5 ஓட்டுகள் இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டில் 1,551 வாக்களர்கள் உள்ளனர். இதில் தேர்தலில் 930 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் திமுக ஆதரவில் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும் சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 ஓட்டுகளும், அதிமுக பிரமுகர் வைத்திலிங்கம் 196 ஓட்டுகளும், சுயேச்சை வேட்பாளர் கந்தேஸ் 84 ஓட்டுகளும், தேமுதிக பிரமுகர் ரவிக்குமார் 2 ஓட்டுகளும், பாஜக பிரமுகர் கார்த்திக் 1 ஓட்டும் பெற்றுள்ளனர்.

தேசிய கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வார்டு உறுப்பினர் தேர்தலில் 1 ஓட்டு மட்டுமே பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர அவரது குடும்ப உறுப்பினர்களே அவர் மீது நம்பிக்கை இல்லாமல் அவருக்கு வாக்களிக்காது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com