நடிகர் ரிஷி காந்த் நடித்துள்ள லோக்கல் டைம்ஸ் இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக, வரும் மார்ச் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல், 240 நாடுகளிலும் ஆங்கில மொழி சப்டைட்டில் (துணையுரை) உடன் வெளியாகிறது.
வட்டம், எஃப்ஐஆர், கல்யாண் சமயல் சாதம் படங்களில் நடித்து கவனம்பெற்ற நடிகர் பிரவீன் முத்துரங்கன் எழுதி நடித்துள்ள புதிய இணையத் தொடர்தான் லோக்கல் டைம்ஸ். இதில் ரிஷி காந்த் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கிறார்.
இந்தத் தொடரை அறிமுக இயக்குநர் நவீன் ஜார்ஸ் தாமஸ் இயக்க, ஜிதீன் துரை சார்பில் ஃபேன்பாய் புரடக்ஷன்ஸ் தயார்த்துள்ளது. இந்தத் தொடரில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரீஷ் தாஸ், சின்னி ஜெயந்தி, நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ளார்கள்.
நகைச்சுவைத் தொடராக உருவாகியுள்ள இந்தத் தொடர் மொத்தம் 7 எபிசோடுகளாக உருவாகியுள்ளது. வீரா, அழகு, வள்ளி, முத்து என்ற நான்கு நண்பர்களின் கதையாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
அமேசான் பிரைம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிஹில் மதோக், “லோக்கல் டைம்ஸ் மிகவும் கிராமத்திய, தொடர்புடைய, உணர்ச்சிகளால் உருவாகிய இந்தத் தொடரால் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.
வாரப் பத்திரிக்கையில் தொடங்கும் நண்பர்கள் பற்றிய இந்தத் தொடர் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளர், “சாதாரணமான, மனதுக்கு லேசான கதையை இயல்பான மக்களின் கதையைக் கூற முயற்சித்திருக்கிறோம். வாரச் செய்தித்தாள் நமக்கு மிகவும் பழக்கமானது. இருந்தும் இதில் நான்கு நண்பர்கள் பற்றின கதைதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்ஸ்பெக்டர் ரிஷி தொடருக்குப் பிறகு அமேசானுடன் இணைந்து பணியாற்றுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Trailer out now! What does this mean for Namma Seidhiâs future?#LocalTimes from March 13th only on @PrimeVideoIN
— Fanboy Production (@fanboyprodoffl) March 6, 2026
Produced by: @JithinThorai
Directed by: #NaveenGeorgethomas
A Fanboy Production
Show Creators: @Wannabbi @PraveenNowActor@iam_rishikanth @actorabdool_lee⦠pic.twitter.com/5WGRTjnbx1
Summary
Prime Video Announces March 13 as the Global Premiere of Tamil Original Comedy-Drama Series Local Times with a Rib-Tickling Trailer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மர்மங்களை ஏற்படுத்துவதில் வென்றதா வதந்தி 2? திரைவிமர்சனம்

ஓடிடியில் வெளியானது சசிகுமாரின் வதந்தி - 2!
சசிகுமாரின் வதந்தி - 2 டிரைலர்!

விக்ராந்தின் எல்பிடபிள்யூ இணையத் தொடர் 120 எபிசோடுகளுடன் நிறைவு!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



