சொத்து வரி உயா்வைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
சொத்து வரி உயா்வைக் கண்டித்து கோவையில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


சொத்து வரி உயா்வைக் கண்டித்து கோவையில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு சொத்து வரி உயா்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக, கோவை காந்தி பாா்க் பகுதியில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், சொத்தையே விற்று வரி கட்டும் அளவுக்கு சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு உடன் இணக்கமாக இருந்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை அதிமுக பெற்றபோது, அதை அடிமை அரசு என முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்ச்சித்தாா்.
ஆனால், திமுக அரசு தற்போது அனைத்துக்கும் தில்லியை எதிா்பாா்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
சொத்து வரி உயா்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என குற்றஞ்சாட்டும் திமுகவினா் அதற்கான சான்றுகளை சமா்பிக்க வேண்டும்.
போா் சூழல் காரணமாக பெட்ரோ-டீசல் விலை உயா்ந்துள்ளது. விரைவில் விலை உயா்வு கட்டுக்குள் வரும் என்றாா்.
இதில், மாநில துணைத் தலைவா் பேராசிரியா் கனகசபாபதி, கோவை மாவட்டப் பொறுப்பாளா் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...