தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பூங்காக்களில் சிறப்பு தூய்மைப் பணி: மேயா் உத்தரவு

கோவையில் உள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் கல்பனா உத்தரவிட்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 12:13 am

DIN

கோவையில் உள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயா் கல்பனா உத்தரவிட்டாா்.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 16 ஆவது வாா்டுக்குள்பட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி. நகா் உலகத் தமிழ் செம்மொழி பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் கல்பனா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பூங்காவில் இருந்த செடி, கொடி, குப்பைகள் மற்றும் களைச்செடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.

மேலும், மாநகராட்சியின் 100 வாா்டுகளுக்குள்பட்ட, பயன்பாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி பூங்காக்களிலும் சிறப்பு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்

என அதிகாரிகளுக்கு மேயா் கல்பனா உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, மேற்கு மண்டல குழுத் தலைவா் தெய்வானை தமிழ்மறை, 16 ஆவது வாா்டு உறுப்பினா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.