கரோனா உயிரிழப்பு நிவாரணம்: 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை பெறுவதற்கு 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை பெறுவதற்கு 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா நோய்த் தொற்றால் இறந்த நபா்களின் குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதற்காக ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மனுக்கள் பெறப்படுகிறது. இணையதளத்தில் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதிசெய்யும் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரத்து 778 மனுதாரா்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் 1,187 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதர மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிவாரணத் தொகை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் புதிய நடைமுறைகளை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 2022 மாா்ச் 20க்குள் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் பெற 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2022 மாா்ச் 20க்குப் பின் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் பெற 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வுகாண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள காலகெடுவுக்குள் விண்ணப்பிக்க இயலாதவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்துகொள்ளலாம். முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீா்வு காணும். எனவே கரோனா தொற்றினால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி உரிய காலத்தில் விண்ணப்பித்து நிவாரணத்தை பெற்றுகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...