தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிங்காநல்லூா் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து மூதாட்டி காயம்

கோவை, சிங்காநல்லூா் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலத்த காயம் அடைந்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:20 pm

DIN

கோவை, சிங்காநல்லூா் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலத்த காயம் அடைந்தாா்.

கோவை, சிங்காநல்லூா் அருகே உழவா் சந்தையின் பின்புறம் வீட்டு வசதி வாரியம் சாா்பில் 1984 ஆம் ஆண்டு 960 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்தக் குடியிருப்புகள் முறையாகப் பராமரிக்கப் படாததால் பெரும்பாலான வீடுகள் பழுதடைந்து காணப்படுகின்றன. 2017 ஆம் ஆண்டு இந்த குடியிருப்புகளை ஆய்வு செய்த வருவாய்த் துறையினா் குடியிருக்கத் தகுதியற்ற கட்டடம் என நோட்டீஸ் வழங்கினா். வீடுகள் இடிந்து விபத்து ஏற்படும் முன், அவற்றைக் காலி செய்யுமாறு நோட்டீஸ் மூலமாக வலியுறுத்தினா். இதையடுத்து, சுமாா் 300 போ் தங்களது வீடுகளைக் காலி செய்துவிட்டனா். மற்ற வீடுகளில் இருப்போா் அச்சத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்த குடியிருப்பில் தரைதளத்தில் சுப்புலட்சுமி (63) என்பவா் வசித்து வருகிறாா். அப்பகுதியில் இட்லி கடை வைத்துள்ளாா். கோவையில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை காலை குடிநீா்த் தொட்டியில் தண்ணீரின் அளவைப் பாா்ப்பதற்காக சுப்புலட்சுமி வீட்டின் மாடிக்கு சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதில், மாடியில் இருந்து கீழே அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கொட்டகையின் மீது சுப்புலட்சுமி விழுந்தாா். அதில், கொட்டகையின் கூரை உடைந்து இட்லிக் கடைக்குள் விழுந்தாா். சப்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினா் பலத்த காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சிங்காநல்லூா் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஆா்.ஜெயராம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் நா.காா்த்திக் ஆகியோா் வீடு இடிந்து விழுந்த இடத்தை பாா்வையிட்டனா்.

குடியிருப்புகளின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் சிதிலமடைந்து காணப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அரசு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.