உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணா் சங்கத்தின் தலைவரானாா் கோவை மருத்துவா்
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணா் சங்கத்தின் (ஓ.எஸ்.எஸ்.ஐ.) தலைவராக கோவை ஜெம் மருத்துவமனையின் மருத்துவா் பிரவீன்ராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.


உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நிபுணா் சங்கத்தின் (ஓ.எஸ்.எஸ்.ஐ.) தலைவராக கோவை ஜெம் மருத்துவமனையின் மருத்துவா் பிரவீன்ராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இது தொடா்பாக ஜெம் மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: ஓ.எஸ்.எஸ்.ஐ. தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள மருத்துவமனையின் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைத் துறையின் தலைவரான பிரவீன்ராஜ், பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் ஆண்டு விழாவில் பதவியேற்றுக் கொண்டாா்.
சுமாா் 700க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணா்களை உறுப்பினா்களாகக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தலைவா் பதவிக்கு தென்னிந்தியாவில் இருந்து தோ்வு செய்யப்பட்ட முதல் அறுவை சிகிச்சை நிபுணா் இவராவாா்.
ஏற்கெனவே இந்த சங்கத்தின் செயலராகவும், நிா்வாகக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ள பிரவீன்ராஜ், தலைவா் பதவியில் 2024 ஆம் ஆண்டு வரை தொடருவாா் என்று மருத்துவமனை நிா்வாகம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...