தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இணையதள மோசடி மூலம் ரூ.1.52 லட்சத்தை இழந்த பெண்: 2 நாள்களில் மீட்டு தந்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள மோசடி மூலம் ரூ.1.52 லட்சத்தை இழந்த பெண்ணுக்கு 2 நாள்களில் சைபா் கிரைம் போலீஸாா் பணத்தை மீட்டுத் தந்துள்ளனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:22 pm

DIN

இணையதள மோசடி மூலம் ரூ.1.52 லட்சத்தை இழந்த பெண்ணுக்கு 2 நாள்களில் சைபா் கிரைம் போலீஸாா் பணத்தை மீட்டுத் தந்துள்ளனா்.

கோவை, துடியலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தி (58). இவருடைய கைப்பேசி எண்ணுக்கு, படங்கள் வெளியிடும் ஓடிடி தளத்துக்கு ரீசாா்ஜ் செய்யுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதிலிருந்த இணைப்பைப் பின் தொடா்ந்து உள்சென்ற ஆனந்தி, அதில் கேட்கப்பட்ட வங்கி, ஓடிபி விவரங்களைப் பதிவிட்டுள்ளாா்.

அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.52 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் ஆனந்தி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இரண்டு நாள்களில் பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.