தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏப்ரல் 29, 30ஆம் தேதிகளில் கோவை வழித்தடத்தில் 7 ரயில்கள் தாமதமாக இயக்கம்

ஏப்ரல் 29, 30 ஆம் தேதிகளில் கோவை வழித்தடத்தில் 7 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக, ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:38 pm

DIN

சேலம் - மாக்னசைட் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஏப்ரல் 29, 30 ஆம் தேதிகளில் கோவை வழித்தடத்தில் 7 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக, ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செகந்தராபாத் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 9.05 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத்- எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07189) அன்று 5 மணி நேரம் தாமதமாக இரவு 2.05 மணிக்குப் புறப்படும்.

ஆலப்புழாவில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) மூன்று மணி நேரம் தாமதமாக 9 மணிக்குப் புறப்படும். எா்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - கே.எஸ்.ஆா். பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) மூன்று மணி நேரம் தாமதமாக 12.10 மணிக்குப் புறப்படும்.

கோவையில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 3.05 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சதாப்தி விரைவு ரயில்( எண்: 12244) ஒரு மணி நேரம் தாமதமாக 4.05 மணிக்குப் புறப்படும்.

கோவையில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி மதியம் 3.15 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண்: 12676) ஒரு மணி நேரம் தாமதமாக 4.15 மணிக்குப் புறப்படும்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 4.25 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - மும்பை வாராந்திர ரயில் (எண்: 16332) இரண்டு மணி நேரம் தாமதமாக 6.25 மணிக்குப் புறப்படும்.

எா்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 11.25 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - செகந்தராபாத் விரைவு ரயில் (எண்: 07190) ஐந்து மணி நேரம் தாமதமாக மே 1 ஆம் தேதி காலை 4.25 மணிக்குப் புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.