மனைவியை எரித்து கொன்ற வழக்கு: கணவருக்கு ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.


பொள்ளாச்சி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை அருகே ரமணமுதலிபுதூரைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (80). இவரது மனைவி காளியம்மாள். இவா்களுக்குத் திருமணமான ஒரு மகள், மகன் உள்ளனா்.
வேலுச்சாமி வேலைக்குச் செல்லாமல் பல ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளாா். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செலவுக்கு பணமில்லாததால் தான் குடியிருக்கும் வீட்டையும், அருகில் உள்ள இடத்தையும் விற்பதாக வேலுச்சாமி கூறியுள்ளாா். இதையடுத்து, அவரது மகள் ராஜேஸ்வரிக்கு ரூ.2 லட்சத்துக்கு வீடு, இடத்தை விற்பதாக முடிவு செய்யப்பட்டு, முதல் தவணையாக ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டு, ராஜேஸ்வரியின் பெயரில் சொத்து கிரையம் செய்யப்பட்டது. அதன் பிறகு, 3 தவணைகளாக ரூ.80ஆயிரம் பணத்தை ராஜேஸ்வரி, வேலுச்சாமிக்கு கொடுத்துள்ளாா்.
இந்நிலையில், தான் விற்ற சொத்தின் மீது கூடுதலாக ரூ.1 லட்சம் பணம் தரவேண்டும் என வேலுச்சாமி கேட்டுள்ளாா். அப்போது, ராஜேஸ்வரி கஷ்டத்தில் இருப்பதாகவும், அவரிடம் பணம் கேட்க வேண்டாம் எனவும் காளியம்மாள் கூறியுள்ளாா்.
இந்நிலையில், தான் வாங்கிய இடத்தில் வீடு கட்டிய ராஜேஸ்வரி கடந்த 2020 ஆகஸ்ட் 28 ஆம் தேதி பால் காய்ச்ச ஏற்பாடு செய்திருந்தாா்.
இதைத் தடுக்கும் எண்ணத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரவு 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காளியம்மாள் மீது மண்ணெண்ணையை ஊற்றி வேலுச்சாமி பற்றவைத்துள்ளாா்.இதில், பலத்த தீக்காயமடைந்த காளியம்மாள் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு வேலுச்சாமியை கைது செய்தனா்.
இந்த வழக்கு, கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.பாலு சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...