தோ்தல் விதிமீறல்: ரூ.1,65,400 பறிமுதல்
கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,65,400 ஐ தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,65,400 ஐ தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் தோ்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும்மேல் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைக் கண்காணித்து, தோ்தல் பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குள்பட்ட நல்லாம்பாளையம் எம்.ஆா்.காம்ப்ளக்ஸ் அருகில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில், உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 400 கொண்டு செல்வது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் அதிகாரிகள் கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...