நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கோவையில் வாக்குப்பதிவு
கோவை மாவட்டத்தில் காலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.


கோவை மாவட்டத்தில் காலை முதலே மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சியில் 100 வார்டுகள், 7 நகராட்சிகளில் 198 வார்டுகள், 33 பேரூராட்சிகளில் 504 வார்டுகள் சேர்த்து 804 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சியில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள், 7 நகராட்சிகளில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 265 வாக்காளர்கள், 33 பேரூராட்சிகளில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 207 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் மொத்தமாக 23 லட்சத்து 41 ஆயிரத்து 883 வாக்காளர்கள் வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 1,290 வாக்குச் சாவடிகள், 7 நகராட்சிகளிலுள்ள 198 வார்டுகளில் 390 வாக்குச் சாவடிகள், 33 பேரூராட்சிகளிலுள்ள 504 வார்டுகளில் 583 வாக்குச் சாவடிகள் சேர்த்து மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 303 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 778 வேட்பாளர்கள், 7 நகராட்சிகளில் 847 வேட்பாளர்கள், 33 நகராட்சிகளில் 1,727 வேட்பாளர்கள் என கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தமாக 3 ஆயிரத்து 352 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு சனிக்கிழமை காலையில் 6 முதல் 7 மணி வரை கட்சி முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 7 மணி முதல் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். காலையிலே வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்குச் சாவடிகளில் வந்து வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகரியுமான ஜி.எஸ்.சமீரன் நிர்மலா கலை அறிவியல் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தினார்.

பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் எந்தவித பிரச்னையுமின்றி உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு என்று தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பெல் பொறியாளர்கள் மூலம் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஊராகம், மாநகராட்சியில் 4,700க்கும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாக்காளர்களும் தவறாமல் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...