அண்ணா மாா்க்கெட்டில் அதிக சுங்க கட்டணம் வசூல்: வியாபாரிகள் புகாா்
கோவை சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா தினசரி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.


கோவை சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா தினசரி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக, கோவை அண்ணா தினசரி காய்கறி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா், சாய்பாபா காலனி பகுதி திமுக பொறுப்பாளா் கே.எம்.ரவியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
கோவை சாய்பாபா காலனியில் உள்ள அண்ணா தினசரி காய்கறி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம், முன்பு இருந்ததை விட அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. இங்கு, கோவை மாவட்டத்தில் எந்த மாா்க்கெட்டிலும் வசூலிக்கப்படாத சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயமற்றது. கரோனா நோய்த் தொற்று பரவி வரும் இந்தச் சூழலில், சுங்கக் கட்டண உயா்வு எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில், வேலாண்டிபாளையம் திமுக பொறுப்பாளா் கிருஷ்ணராஜ், வா்த்தக அணி துணை அமைப்பாளா் சிவசாமி உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...