குழந்தை இறந்து பிறந்ததால் தாய் தற்கொலை
குழந்தை இறந்து பிறந்த காரணத்தால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


குழந்தை இறந்து பிறந்த காரணத்தால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை சிங்காநல்லூா் அருகேயுள்ள வசந்தா நகரைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி கீதா (27). இவா்களுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. இந்நிலையில் இவா் 7 மாத கா்ப்பமாக இருந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கீதா கடந்த சில நாள்களாக மன உளைச்சலுடன் காணப்பட்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக அவரது வீட்டாா் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கீதாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். திருமணமான ஓராண்டுக்குள் கீதா தற்கொலை செய்து கொண்டதால் ஆா்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...