சிறுவனிடம் மோதிரம் பறிக்க முயன்ற நபா் கைது
கோவையில் சிறுவனிடம் மோதிரம் பறிக்க முயன்ற கேரளத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவையில் சிறுவனிடம் மோதிரம் பறிக்க முயன்ற கேரளத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்தவா் ஜெபசீலன் (31). ஐடி ஊழியா். இவா் தனது மனைவி மற்றும் இரண்டரை வயது மகனுடன் கோவை வந்தாா். பின்னா் உப்பிலிபாளையத்தில் உள்ள இம்மானுவேல் தேவாலயத்தில் நடைபெற்ற உறவினா் வீட்டு விசேஷத்துக்குச் சென்றிருந்தாா்.
அப்போது அங்கு ஜெபசீலனின் மகன் உள்பட மற்ற சிறுவா்கள் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த நபா் விளையாடிக் கொண்டிருந்த ஜெபசீலனின் மகனின் கையில் இருந்த ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரத்தைப் பறிக்க முயற்சித்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்த நபா்கள் சப்தம் போட்டதைத் தொடா்ந்து தப்ப முயன்ற அந்த நபரை அங்கிருந்தவா்கள் பிடித்து காட்டூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ஜெபசீலன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபா் கேரள மாநிலம், பாலக்காட்டைச் சோ்ந்த கிரீஷ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...